பயிற்சியின்போது பலத்த காயம்; டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா பிரபல கிரிக்கெட் வீரர்?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 30, 2018 11:43 AM
Prithvi Shaw ruled out of First Test against Australia in Adelaide

விராட் கோலி தலைமையிலான, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறது. தீவிர பயிற்சிகளுக்கு பின் இந்திய வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த போட்டிகளில், முந்தைய மேட்ச், 1-1 என்கிற கணக்கில் டிராவில் முடிந்திருந்தது. இந்த சூழலில், அடுத்தடுத்து இந்திய அணி எதிர்கொள்ள உள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆட்டம் வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.


ஆனால் டெஸ்ட் போட்டிக்கும் முன்பாக, 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கும் இடையில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் வீரர் பிரித்வி ஷாவின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.


பந்து, பவுண்டரியை தாண்டிச்செல்லும்போது, ஒரு நல்ல கேட்சை பிடிப்பதற்காக முயற்சித்தபோது, அவருக்கு இவ்வாறு ஏற்பட்டதால்,  உடனடியாக மைதானத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தூக்கிச் செல்லப்பட்டார். அதனால் அடிலெய்டியில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா விளையாட மாட்டார் என அறியப்படுகிறது.

 

Tags : #BCCI #CRICKET #AUSTRALIA #SYDNEY #PRITHVI SHAW #ADELAIDE #INDIA #TESTMATCH