சாலையில் போலீசாரின் வாகன சோதனையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தவருக்கு நடந்த விபரீதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 30, 2018 11:02 AM
TN Man dies who tried to escape from traffic checking

தூத்துக்குடியின், ரவுண்டானா பகுதியில் மத்தியபாகம் டிவிஷனைச் சேர்ந்த போலீசார் தீவிர இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர், முப்புடாதி என்னும் நபர். இவர் தலைக்கவசம் அணியாமல் அவ்வழியே வந்துள்ளபோது, அவரைப் பார்த்த போலீசார், வாகன சோதனை நிமித்தமாக அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். 

 

ஆனால் முப்புடாதி என்னும் அந்த நபர் பயந்துபோய், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடுவதற்காக,வண்டியை வேகமாக வேறுபக்கம் செலுத்த முயற்சித்துள்ளார். எனினும் எதிர்பாராத விதமாக, தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

 

இதனை அடுத்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த போலிசார், உயிரிழந்த வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் சச்சரவு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT #THOOTHUKUDI #TRAFFIC #POLICE #VEHICLE #CHECKING