கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்த அம்மா.. புரியாமல் அழுத 3 வயது மகன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 05, 2018 02:03 PM
Mom Hangs herself in front of 3yr old son due to family torture

புனேவில், 3 வயது மகனுக்கு முன், 35 வயது அம்மா குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை அடுத்து, அந்த காட்சியை பார்த்து மகன் அழுதுள்ள சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. 

 

கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்வரூப் ஸ்ரீசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டவர் ஸ்நேகா ஸ்ரீசாகர். திருமணம் ஆன முதலே கணவருடனும், மாமியாருடனுமான பல்வேறு தகராறுகளால் நொந்து போய் இருந்த ஸ்நேகாவை, அவர்கள் இருவரும் கார் வாங்குவது உள்ளிட்ட பல ஆடம்பர செலவுகளுக்காக 6 லட்சம் வரை பணம் வரதட்சணையாகக் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். 

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்நேகா, வீட்டில் யாரும் இல்லாதபோது, 3 வயது மகனுக்கு முன்னால், சீலிங்கில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சியை பார்த்த மகன் ஒன்றும் புரியாமல் அழுது பரிதவித்துள்ளான். அதன் பின்னர் அக்கம் பக்கத்தினரால் கவனிக்கப்பட்டு ஸ்நேகாவின் பிரேதம் மீட்கப்பட்டது. 

 

இதுகுறித்து விசாரித்த போலீசார் ஸ்நேகாவின் தந்தை திலீப் தீக்ஸித் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை- தற்கொலைக்கு தூண்டல்  உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பிரிவுகளில் ஸ்நேகாவின் கணவர் ஸ்வரூப் ஸ்ரீசாகர் மற்றும், ஸ்வரூப்பின் தாய் பத்மா ஸ்ரீசாகர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  

Tags : #SEXUALABUSE #SUICIDEATTEMPT #PUNE #WOMEN #DOWRY #TORTURE