சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபர்.. போலீஸூக்கு பயந்து செய்த காரியம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 14, 2018 12:00 PM
rapist attempts suicide when police cornered him

ராஜஸ்தானின் ஜலாவரி எனும் ஊரில் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த 3 வயது பள்ளிச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

 

அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு ஈவு இரக்கமின்றி கழுத்தை நெறித்து கொன்றதாக அதே பகுதியைச் சேர்ந்த 20  வயது நபர் மீது, போலீஸார் சந்தேப்பட்டுள்ளனர். மது அருந்திய நிலையில் இந்த இளைஞரை, சம்பவத்தன்று,  சிறுமியுடன் பார்த்ததாக சிலர் கூறியதை வைத்து போலீஸார் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து பிடிக்க முயன்றுள்ளனர். 

 

ஆனால் அந்த இளைஞரோ, போலீஸுக்கு பயந்து, மின் ஒயரைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். 

Tags : #SEXUALABUSE #MINORGIRL #MURDER #RAPE #BIZARRE