'3 வயது சிறுவனுடன் சுற்றி திரியும் கொலை,கொள்ளை தம்பதி':வீடு வாடகைக்கு கேட்டால்,மக்களே உஷார்...காவல்துறை எச்சரிக்கை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 07, 2018 11:45 AM
Avadi Double murder police ask public to be alert

வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.மூன்று வயது சிறுவனுடன் வீடு வாடகைக்கு கேட்டு வரும் தம்பதியினரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு காவல்துறை சார்பில் ஏச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் இவர்களை குறித்து தகவல் தெரிந்தால் 100 அல்லது 9444803562 என்ற எண்ணில் தகவல் கொடுக்குமாறும் காவல்துறையின் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

 

பொடிலப்பு சுரேஷ் குமார் மற்றும் பூலட்சுமி ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.தம்பதியரான இவர்கள் இருவர் மீதும் ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.இவர்கள் இருவரும் தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக தமிழகம் வந்துள்ளனர்.

 

ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு பத்திரிகையாளரான ஜகதீசன் மற்றும் அவரது மனைவி விஷாலினியும் தனியாக வசித்து வந்தார்கள்.இந்நிலையில் அவர்களிடம் வீட்டு வேலைக்காக சுரேஷ் குமாரும் அவரது மனைவி பூலட்சுமியும் சேர்ந்துள்ளனர்.மேலும் வேலைக்கார தம்பதிக்கு,ஜகதீசன் அவர்களின் வீட்டிற்கு அருகே இருந்த மற்றோரு வீட்டை தங்குவதற்காக கொடுத்துள்ளார்.அதன் பின்பு அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த இருவரும்,யாரும் இல்லாத நேரத்தில்,அவர்கள் வைத்திருந்த இரும்பு ராடால் ஜகதீசன் மற்றும் அவரது மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து 50 சவரன் நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.

 

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.அங்கு இருந்த இரும்பு ராடை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் ஆவடி பகுதியில்  இருந்த  சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுரேஷ் குமார், பூலட்சுமியை கண்டுள்ளனர்.மேலும் ஜகதீசன் வீட்டிலிருந்து கிடைத்த தடயங்களை வைத்தும் அவர்கள் தான் கொலை செய்தனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

 

அந்தத் தம்பதியினர் ஆவடி அருகிலோ அல்லது சுற்றுவட்டாரப் பகுதிகளிலோ சுற்றித்திரியலாம் அல்லது வீடு வாடகைக்கு கேட்டோ,வீட்டில் வேலைக்கு சேர்வதற்கோ முயற்சிக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றார்கள்.எனவே அந்த இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களை உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அந்தத் தம்பதியினரை கண்டால் உடனே காவல்துறையினர் 100 அல்லது 9444 803 562 என்ற எண்ணில் தகவல் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

 

மேலும் அவர்கள் இருவரும் தங்கள் மூன்று வயது மகனுடன் சுற்றி திரிவது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் மூன்று வயது சிறுவனுடன் வீடு கேட்டு வரும் தம்பதியினரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : #MURDER #CCTV #TAMILNADUPOLICE #PODILAPPU SURESH KUMAR #BHULAKSHMI #CHENNAI CITY POLICE #AVADI DOUBLE MURDER