காதல் மனைவியுடன் சேர்ந்து முதலாளியை குடும்பத்தோடு கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 03, 2018 06:38 PM
Man and women gets hide after killing their owner and owner\'s wife

வயதான முதலாளிகளான கணவன்- மனைவி இருவரையும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களே கொலை செய்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு அய்யப்பன் நகரைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விலாசினி இருவரும் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அண்மையில் வேலைக்கு சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். கொலை-கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர். அண்மையில் ஜெயிலில் இருந்து தப்பி வந்து, தனது காதல் மனைவி மற்றும் தன் குழந்தையுடன் சென்னையில் ரோட்டோரத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

 

அப்போது ஏஜெண்ட் ஒருவருக்கு மது வாங்கிக்கொடுத்து, அவரது நம்பிக்கையை சம்பாதித்து, ஜெகதீசனின் வீட்டில் குறைந்த சம்பளத்துக்காக குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார் சுரேஷ். அவர்களின் மீது இரக்கம் கொண்டு வேலைக்கு சேர்த்த ஜெகதீசன், பின்னர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி தன் வீட்டில் எடுத்துக்கொள்ளும் அதிக உரிமைகளையும், எல்லை மீறல்களையும் கவனித்து வந்ததோடு, இருவரும் வேலை செய்யாமல் ஏமாற்றி நடித்து வந்ததோடு, தன்னையும் தன் மனைவியையும் அவ்வப்போது நோட்டமிடுவதையும் கண்டுபிடித்துள்ளார்.

 

இந்த நிலையில் வேலையை விட்டு செல்லுமாறு  சுரேஷிடம் ஜெகதீசன் கூறியுள்ளார். ஆனால் ஜெகதீசனும் அவரது மனைவி விலாசினியும் உஷார் ஆனதை தெரிந்துகொண்ட சுரேஷ் தன் மனைவியுடன் சேர்ந்து, வயதான தம்பதியர் என்றும் பாராமல், முதலாளிகள் என்றும் பாராமல், ஆதரவு இன்றி தனியாக வசித்து வந்த பணக்காரர்களான ஜெகதீஷ் மற்றும் விலாசினி இருவரையும் குழாயினால் தாக்கிவிட்டு நகை-பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.  சுரேஷையும் அவரது காதல் மனைவியையும் மேற்கூறிய அந்த ஏஜெண்டு மூலம் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Tags : #MURDER #WOKERS #CHENNAI #TAMILNADU #CRIME #BOSS