'மரணம் மாஸு மரணம்'.. தலைவரின் 'பேட்ட'யைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 03, 2018 06:24 PM
Netizens talks about Petta Single track

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் பேட்ட திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா,விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் மற்றும் மேகா ஆகாஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில் அனிருத் இசையில் எஸ்.பி.பி-அனிருத் இணைந்து பாடிய 'மரண மாஸ்' சிங்கிள் டிராக், பேட்ட படத்தில் இருந்து சற்றுமுன் வெளியானது. தர லோக்கலாக அனிருத் இறங்கி அடித்திருக்கும் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினிக்கு ஏற்ற ஒரு மாஸ் பாடல் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதில் இருந்து ஒரு சிலரின் கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

 

 

 

 

 

— 🕊️ புதிய பறவை 🕊️ (@MigaMikee) December 3, 2018