'எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம்'.. பிரமாண்ட இயக்குநர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 30, 2018 07:24 PM
Director Shankar tweets about 2 O movie

எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம் என, இயக்குநர் ஷங்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

மிகப்பெரும் பொருட்செலவில் நேற்று வெளியான 2.O திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.ரஜினி, அக்ஷய்,எமி ஜாக்சன்,ஷங்கர், ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ரசிகர்கள்,பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம் என, இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''2.0 படத்தை ரசித்து ஊக்குவித்து கொண்டாடி அதை மிகப்பெரிய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. படத்தை ஆதரித்த ஊடகங்களுக்கும் எங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்ட எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி,'' என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : #RAJINIKANTH #RAJINI #SHANKAR #2POINTO