ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த 'மரண மாஸ்' அப்டேட் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 29, 2018 04:30 PM
Rajinikanth\'s next movie start in March 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது,'' லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019-ல் தொடங்கவுள்ளதாக,'' தெரிவித்தனர். மேலும் இப்படம் 2019-ம் ஆண்டு கடைசி அல்லது 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : #RAJINI #ARMURUGADOSS