கொலுசு சத்தம் பசங்க மனச பாதிக்குதா?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 03, 2018 11:59 AM
it is a distraction for boys when girls wear anklets,Says TN Minister

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டி பாளையத்தில் நிகழ்ந்த ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் தன் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதலானவற்றை நலத்திட்ட அடிப்படையில் அரசு சார்பில் வழங்கினார். 

 

தொடர்ந்து அங்கு கூடியிருந்த நிரூபர்கள், 'பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணிவதற்கு தடை  உள்ளதா' என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘மாணவிகள் கொலுசு அணிவது, மாணவர்களின் கவனச் சிதறலுக்கு காரணமாவது உண்மைதான், எனினும் அதனை தடை செய்வது பற்றிய எந்த விபரமும் என் காதுக்கு எட்டவில்லை’ என்று கூறினார். 

 

Tags : #SENKOTTAIYAN #TAMILNADU #VIRAL