குடிக்க பணம் தரவில்லை என்று பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த 20 வயது இளைஞர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 10, 2018 03:49 PM
20 Yr Old boy sets his mother on fire after she refused to give money

பெங்களூருவில் தன்னை பெற்ற தாயையே குடித்துவிட்டு மகன் ஒருவர் குரூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வலம்வந்து அனைவரையும் அதிரவைத்தது. அதற்குள் இன்னொரு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனது தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. 

 

பெங்களூருவின் சதாசிவம் நகரில் வசிக்கும் உத்தம் குமார் எனும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தன் தாய் பாரதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் பணம் தர மறுத்ததோடு, அந்த பணத்தை உத்தம் குமார் மது அருந்துவதற்கு செலவழித்துவிடுவாரோ என்கிற பயத்தில் கேள்வி கேட்டுள்ளார். 

 

ஆனால் ஒரு கட்டத்தில் தாய்-மகன் இருவருக்குமான வாக்குவாதம் அதிகமாகவே, ஆத்திரத்தின் உச்சத்தில், உத்தம் குமார் தன் தாயையே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். 

 

முகத்தில் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொண்டுவருகிறார் பாரதி. அவரை அவரது கணவர்தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலுன் தன் மனைவியை பெட்ரோல் ஊற்றி, கொல்ல முயற்சித்த மகன் உத்தம் குமார்  மீது போலீஸில் புகாரும் அளித்துள்ளார். 

 

இதனை அடுத்து உத்தம் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் அவரை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

 

Tags : #FIREACCIDENT #SON #MOTHER #CRIME #POLICE #BIZARRE