‘சொல்லுவியா?’.. பெற்ற தாயை ஈவு இரக்கமின்றி தாக்கும் மகன்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 10, 2018 10:06 AM
17 year Old boy from Bengaluru Beats mother with broom viral video

வளர்ந்த விடலைப் பருவ மகன் ஒருவர், பெற்ற தாயையே ஈவு இரக்கமில்லாமல், துடைப்பத்தால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இதயத்தை பிழிந்து வருகிறது. 

 

கர்நாடகாவின் பெங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் 17 வயது இளைஞர் மது மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். அவரது இந்த பழக்கத்தினால் அவர் நடந்துகொள்ளும் முறை, விதம் எல்லாம் அவரது அம்மாவுக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இதனால் வேதனைப் பட்ட அவரது அம்மா, அக்கம் பக்கத்து வீட்டார்களிடம் தன் மகனின் நிலை பற்றி கூறியுள்ளார். 

 

ஆனால், தன்னைப் பற்றி அக்கம் பக்கத்தினரிடம் கூறி தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படியாக தன் அம்மா செய்துள்ளதாக நினைத்த அந்த இளைஞர் பெற்ற அம்மாவையே, துடைப்பம் கொண்டு வன்மையாக தாக்குகிறார். மேலும் தன்னைப் பற்றி எல்லாரிடமும் கூறுவதை தவிர்க்கச் சொல்லி மிரட்டும் தொனியில் அந்த வீடியோவில் எச்சரிக்கையும் செய்கிறார். 

 

இந்த சம்பவத்தை வீடியோவாக அந்த இளைஞனின் அக்காவே படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சூ-மோட்டோ கேஸ் எனப்படும் முறையில், காவல்துறை புகார்களின் பேரில் அல்லாமல், தன் முனைப்பில் இளைஞர்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : #ASSAULT #HUMANRIGHTS #VIRAL #VIDEO #BRUTAL #SON #MOTHER #BENGALURU