22 தனி விமானங்கள்.. 1000 சொகுசு கார்கள் தயார்.. மிரள வைக்கும் இந்திய பெண்ணின் திருமணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 04, 2018 06:37 PM
22 private planes and 1000 Cars ready for isha ambani marrige

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, ஆனந்த் பிராமல் என்பவரை மணக்கவிருக்கிற செய்தி பலரும் அறிந்ததுதான். முன்னதாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் குடும்பத்தின் திருமண பத்திரிகையே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

இந்த நிலையில் டிசம்பர் 12-ஆம் தேதி உதய்பூரில் பிரம்மாணடமாக நடக்கவுள்ள இவர்களின் திருமணத்துக்காக 22 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவை சிறப்பு நட்சத்திர விருந்தினர்களுக்காகவாம்.  இதற்கு முக்கியக் காரணம் 7-ஆம் தேதி உதய்பூரில் தேர்தல் நடக்கவிருப்பதால் தனியார் விமான நிலையம் பிஸியாகிவிடும் என்பதுதான்.

 

அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தில் இருந்து திருமணம் நடக்கவுள்ள இடத்துக்கு போவதற்கு விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ , ஆடி உள்ளிட்ட வகையிலான 1000 சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இன்னும் என்னவெல்லாம் அம்பானி வீட்டு கல்யாணத்தில் நிகழப்போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : #ISHAMBANI #MARRIAGE #VIRAL #INDIA #MUKESHAMBANI