வாட்ஸ்ஆப் படங்களால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண் வீட்டார்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 03, 2018 05:23 PM
Man cancels wedding in last min after seeing bride\'s photo on WhatsApp

சினிமாக்களில் வருவதுபோல், முகூர்த்த நேரத்தில் வாட்ஸ்-ஆப் புகைப்படங்களால் திருமணம் நின்றதும் உடனடியாக மாப்பிள்ளை மாற்றப்பட்டதும் இணையத்தில் வைரலான சம்பவமாக வலம் வருகிறது.

 

கர்நாடகாவின் சக்லேஷ்பூர் தாலுகா அருகே பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு முகூர்த்தம் வரை சென்ற தாரேஷ் மற்றும் ஷ்ருதி எனும் திருமண தம்பதிகளுக்கான திருமணம் நடக்க சில நொடிகளே இருந்த நிலையில், தாரேஷின் வாட்ஸ் ஆப்புக்கு சில புகைப்படங்கள் தெரியாத நம்பரில் இருந்து வந்துள்ளன. 

 

அதில், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணான ஷ்ருதியுடன், வேறு ஒரு நபர் நெருக்கமாக இருப்பதை பார்த்த தாரேஷ் கோபமாகி, திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். அனைவரும் அதிர்ச்சியில் இருந்த அந்த நேரம் அங்கு வந்தவர்தான் அபிலாஷ். 

 

ஷ்ருதியின் காதலரும், தாரேஷின் வாட்ஸாப்புக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்தவருமான அபிலாஷ், அரங்கில் இருந்தவர்களிடம் உண்மையைச் சொல்லவும், முதலில் மறுத்த ஷ்ருதியின் பெற்றோர்கள், திருமணம் நின்றுபோனதால், ஷ்ருதியின் காதலர் அபிலாஷையே மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த உண்மைகளை தன்னிடம் ஷ்ருதி சொல்லியிருக்க வேண்டும் என்றும் இது ஷ்ருதியின் நாடகமாகக் கூட இருக்கலாம் என்றும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த தாரேஷ் கூறியுள்ளார். 

Tags : #WHATSAPP #MARRIAGE #BREAKUP #BRIDE #GROOM