'பைக்-தங்கச்செயின்' வரதட்சணையாக கேட்ட மணமகனின்... பாதி தலையை மொட்டையடித்த நபர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 22, 2018 03:41 PM
Groom\'s head tonsured allegedly, he refused to marry the bride

Photo Credit: ANI

 

பைக் மற்றும் தங்கச் செயின் வரதட்சணையாக வேண்டும் எனக்கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதி தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 5 நாட்களுக்கு முன்னர்  நடைபெறவிருந்த திருமணமொன்று, வரதட்சணை காரணமாக நின்று போனது. கடைசி நேரத்தில் மணமகன் பைக்கும், தங்க செயினும் வரதட்சணையாக கேட்டதாகவும், மணமகள் வீட்டினரால் இதனைக் கொடுக்க முடியாமல் இந்தத் திருமணம் நின்று போனதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் மணமகன் தூக்கத்தில் இருந்தபோது அவரின் பாதி தலையை யாரோ மர்ம நபர் மொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மணமகளின் பாட்டி கூறும்போது,'' திருமணம் நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னர் மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டனர். எங்களால் தர முடியாது என்று கூறிவிட்டோம். அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டனர். அவரின் தலையை யார் மொட்டையடித்து என தெரியவில்லை,'' என தெரிவித்துள்ளார்.

 

உறங்கிக்கொண்டிருந்த மணமகனின் பாதி தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம், லக்னோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #UTTARPRADESH #BRIDE #MARRIAGE