'காதலனை மணக்கும் பிக்பாஸ் பிரபலம்'.. திருமணத்தை நடத்தி வைக்கப் போவது இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 31, 2018 11:31 PM
Biggboss fame Suja Varunee get married soon

நடிகையும், கடந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை சுஜா வருணீ விரைவில் திருமண பந்தத்தில் நுழையவுள்ளார். சிவாஜியின் பேரனும், நடிகருமான சிவகுமாருக்கும், சுஜாவுக்கும் வருகின்ற நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

 

இதனையொட்டி தற்போது திருமண பத்திரிகைகளுடன் இருவரும் ஜோடியாக சென்று நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

 

அந்தவகையில் முதல் திருமண அழைப்பிதழை நடிகர் கமல்ஹாசனுக்கு வைத்துள்ளனர். மேலும், சுஜா-சிவகுமார் திருமணத்தை கமல்ஹாசன் முன்னின்று நடத்தி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சுஜாவின் தந்தை ஸ்தானத்தில் இருந்து கமல் இத்திருமணத்தை நடத்தி வைக்கப்போவதாக கூறப்படுகிறது.

 

Tags : #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #SUJAVARUNEE #MARRIAGE