உங்க ப்ரெண்ட் யார்னு.. 'ஹலோ சகா' நியூ ப்ரோமோ வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 22, 2018 06:29 PM
Watch Video: Actress Shruti Haasan turns TV host

தந்தை கமல்ஹாசன் வழியில் நடிகை சுருதி ஹாசனும் சின்னத்திரை தொகுப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

 

இதற்கான ப்ரோமோ வீடியோவை சன் டிவி சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதில் உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று  சொல்கிறேன் என சுருதி சொல்வது போலவும், அவர் வீட்டிற்கு நண்பர் ஒருவர் வருவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தேதி மற்றும் நேரம் எதுவும் அறிவிக்காமல்  வீடியோ முடிவடைகிறது. இதன் வழியாக சின்னத்திரையிலும் சுருதி கால்பதிக்கவுள்ளார்.

 

சமீபத்தில்  விஷால், வரலட்சுமி இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக சின்னத்திரையில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : #KAMALHAASAN #SHRUTIHAASAN