நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட நபர்.. இப்படி ஒரு வேண்டுதல் இதுக்காகத்தான்?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 06, 2018 04:59 PM
AP Man Cuts his tongue and donated to a temple hundi

ஆந்திரபிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதை எட்டிய நபர் தனது கட்சித் தலைவரின் வெற்றிக்காக செய்துள்ள காரியம் பலரிடையே பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

பொதுவாக தொண்டர்கள் தலைவருக்காக காவடி எடுப்பது, தீ மிதிப்பது உள்ளிட்ட கோவில் வழிபாடுகளைச் செய்வது உண்டு. ஆனால் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோவில் உண்டியலில் தனது நாக்கை வெட்டி காணிக்கையாக்கியிருக்கிறார்.

 

கேட்கவே நடுங்கவைக்கும் இந்த காரியத்தை அவர் ஏன் செய்துள்ளார் என்று பார்த்தால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவுக்கு, தான் விரும்புபவர்கள் முதல்வர்களாக வேண்டும் என்றும், தனக்கு ஆந்திர பிரதேச அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்றும் காணிக்கை செலுத்துவதாக ஒரு கடிதத்தை கையுடனே வைத்திருக்கிறார். 

 

இதை அறிந்த பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறை ஆய்வாளர், இதனை விசாரித்து வருகிறார்.  நாக்கை வெட்டிக்கொண்ட மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானவில் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தலும் 11-ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

Tags : #BUZZ #BIZARRE #VIRAL #TELANGANA #TONGUE