‘அப்பாவ அவங்கதான் அங்கிள் அழச்சிட்டு போயிருக்கனும்’.. பவர் ஸ்டாரை காணவில்லை?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 08, 2018 03:06 PM
Tamil Actor Power Star Srinivasan is missed, Says His daughter

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை என்றும், அவரை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும் அவரது இளம் மகள் வைஷ்ணவி போலீசாரிடம் புகார் அளித்ததோடு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். 

 

அதன்படி, பவர் ஸ்டார் ஒரு ஹோட்டலுக்கு யாரையோ பார்க்கச் சென்றதாக, முதலில் அவரது டிரைவர் மூலமாக தகவல் வர, வெகு நேரம் போனை எடுக்காத பவர் ஸ்டார் சீனிவாசன், பிறகு போன் செய்த சிலர், தாங்கள் போலீஸ் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் சொத்து விபரங்கள் பற்றிய வாக்குமூலத்தை வாங்கிக்கொண்டு பவர் ஸ்டாரை அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். எனினும் சிறிது நேரத்தில் பவர் ஸ்டார் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவரை பத்திரப் பதிவுக்கு ஊட்டிக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளனர்.

 

ஆனால் இதற்கிடையே பேசிய பவர் ஸ்டாரோ, தன்னை அழைத்துச் செல்பவர்கள் போலீஸ் இல்லை வேறு யாரோ என்றும் கூறியுள்ளார்.  பிறகு பவர் ஸ்டாரின் மனைவிக்கு டிக்கெட் போட்டு ஊட்டிக்கு வரவழைத்துள்ளனர். ஆனால் அங்கு சென்ற அம்மாவின் போனையும் அவர்கள் பிடுங்கி வைத்துள்ளனர். 

 

இதனிடையே ஊட்டிக்குச் செல்லும் முன் பவர் ஸ்டாரின் மகள் வைஷ்ணவியிடம், பவர் ஸ்டாரின் மனைவி கொடுத்த புகாரை காவல்துறையிடம் கொடுத்த வைஷ்ணவி இந்த விபரங்களை அளித்துள்ளார். மேலும் பவர் ஸ்டாரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ள பெங்களூர் ஆட்கள்தான் குறித்த தேதிக்கு முன்னரே வந்து பவர் ஸ்டாரை அழைத்துச் சென்றுவிட்டதாக பவர் ஸ்டார் வைஷ்ணவியிடம் கூறியுள்ளார். திரை உலகில் பவர் ஸ்டாருக்கு நிகழும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

Tags : #ACTOR #CRIME #CASE #DAUGHTER #MISSING