17 வயதில் நடிகரான பள்ளி மாணவர் தற்போது தந்தையாகியுள்ள சந்தோஷத்தில்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 04, 2018 04:44 PM
17 yr old School boy and 16 yr old girl becomes parents

பிரிட்டனின் புகழ்பெற்ற கொரனேஷன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வரும் அலெக்ஸ் தனது 17வது வயதில் தன் குழந்தைக்கு தந்தையாகியுள்ளதால் ஹாட் ட்ரெண்டிங் தலைப்பாகி வருகிறார்.


பலராலும் அறியப்படும் பிரபலமான அலெக்ஸ், தனது பள்ளிப்படிப்பின்போது அங்குள்ள சேனல் ஒன்றில் நடித்து, பின் பிரபல சீரிஸ் ஒன்றில் மெயின் கதாபாத்திரமாக நடித்து வந்தார். ஒரு பக்கம் பள்ளி, இன்னொரு பக்கம் திரை என இதற்கிடையிலும் ஏப்ரல் மாதம் லெவி செல்பி எனும் 16 வயது தோழியுடன் காதலில் விழுந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு 15 வயதுதான். பின்னர் ரகசியமாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.


இந்த நிலையில் அலெக்ஸ் தற்போதே தனது 17வது பிறந்த நாளை ஒருவாரத்துக்கு முன்பு கொண்டாடினார். 16-ஆம் வயது முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில் தனது 17-ஆம் வயதில் தனக்கும் தனது காதல் மனைவிக்கும் பிறந்த இந்த குழந்தையை முதலில் தள்ளிப்போடச் சொன்னவர், குழந்தை பிறந்ததும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். இருவருக்கும் இனி குழந்தைதான் உலகம் என லெவி இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags : #ALEX #CORONATIONSTREET #ACTOR #SCHOOLBOY #SCHOOLGIRL #PARENTS #FATHER #NEWBORN