மேலும் ஒரு வழக்கில் கைது உத்தரவா?... மருத்துவமனையில் கருணாஸ்?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 10:56 AM
Caught in yet another case? Karunas at hospital?

நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அவதூறு பேச்சு மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிரான அனுமதி பெறாத போராட்டம் உள்ளிட்ட இரு வழக்குகளுக்காக சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

 

பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவரை மேலும் ஒரு வழக்கில் கைது செய்ய, சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸின் வீட்டிற்கு இன்று காலை 5 மணிக்கு, சென்னை மற்றும் நெல்லையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் சென்றுள்ளனர். 

 

ஆனால் கருணாஸ் வீட்டில் இல்லை என தெரிந்ததும் போலீசார் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். போலீசார் இது பற்றி கூறுகையில், கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #KARUNAS #KARUNASARREST #HOSPITAL #POLITICIAN #ACTOR