தட்டிவிட்டதால் செல்போனை பறிகொடுத்த ராகுலுக்கு சிவகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 02, 2018 02:21 PM
Actor Sivakumar has gifted that youngster a new mobile phone

அண்மையில் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் தற்போது அந்த இளைஞனுக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

 

முன்னதாக தனது இந்த செயலுக்கு நடிகர் சிவகுமார், ‘ரசிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள், கலைஞர்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு நடந்ததற்கு உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியிருந்தார். 

 

இந்நிலையில் சிவகுமாரிடம் அந்த சூழலில் செல்ஃபி எடுக்க வந்தபோது, சிவகுமார் தட்டிவிட்டதால், சேதமாகிய செல்பொனுடன் இருந்த அந்த இளைஞர் ராகுல் என்பவருக்கு ரூ.21,000 மதிக்கத்தக்க புதிய செல்போனை இழப்பீட்டுக்கு பதிலாக, சிவகுமார் சார்பில் நேரில் சென்று வழங்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து பேசிய ராகுல், இது குறித்து ராகுல் நடிகர் சிவகுமார் தனக்கு புதிய மொபைல் போனை வாங்கித் தந்துள்ளதாகவும், அவரின் இதய பூர்வமான இந்த செயலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

 

மிக அண்மையில் மதுரை தனியார் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சிறப்பு விருந்தினராக சென்றபோது நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுலின் செல்போனை சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு தட்டிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : #SIVAKUMAR #SURYA #KARTHI #ACTOR #CELLPHONE