மனைவியின் சாவை ஆணவப்படுகொலை என சந்தேகித்த கணவரும் 2 மாதத்துக்கு பின் சடலமாக மீட்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 10, 2018 05:51 PM
man found dead in same place where his wife was killed 3 months before

மும்பையில் மங்கள்வேதா அருகே, 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் சடலமாக கிடைத்துள்ளது. இதே இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் இதே இளைஞரின் மனைவி இறந்த நிலையில் மீட்கப்பட்டார் என்பதுதான் இதில் இருக்கும் இன்னொரு மனதை உருக்கும் சம்பவம்.

 

ஸ்ரீசாலி பிராஜ்தார் என்கிற இந்த இளைஞர், அனுராதா பிராஜ்தார் என்கிற பெண்ணை சில நாட்களுக்கு முன் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்.  அனுராதாவின் அப்பா வைத்திருந்த பெரும் பண்ணையில் கூலி வேலை பார்த்தவர்தான் ஸ்ரீசாலியின் அப்பா. ஆனால் வர்க்க முரண்பாடுகளை தாண்டியும் ஸ்ரீசாலி - அனுராதா இருவரும் காதலித்து, வீட்டார் சம்மதம் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறி, இதர சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

 

ஒரு நாள் தேர்வு எழுத சென்ற அனுராதா படுகொலை செய்யப்பட்டு, இப்போது ஸ்ரீசாலி இறந்து கிடந்த இதே மங்கள் வேதா பகுதியில் வீசப்பட்டிருந்தார்.  அதற்குக் காரணம் அனுராதாவின் அப்பா மற்றும் மாற்றாந்தாய்தான் என்றும் அது ஒரு ஆணவப்படுகொலை என்றும் ஸ்ரீசாலி உயிருடன் இருக்கும்போதே கூறியிருந்தார்.

 

அதற்கு முன்பாகவே, தனக்கும்  தன் கணவருக்கும்  தன் பெற்றோர்களால் ஆபத்து இருப்பதாக அனுராதா எழுதி வைத்திருந்த டயரி குறிப்புகளை வைத்துக்கொண்டு போலீசார் அனுராதாவின் தந்தையையும் மாற்றாந்தாயினையும் விசாரித்து வருவதோடு, ஸ்ரீசாலி கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்துகொண்டுள்ளாரா என்கிற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Tags : #MUMBAI #MURDER #CRIME #WIFE #HUSBAND #HONOURKILLING