‘மனுஷங்கள சாப்பிட்டு போர் அடிக்குது’.. ஹேண்ட்பேகில் மனித கை, கால்களுடன் சுற்றிய நபர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 13, 2018 05:12 PM
cannibalism - 2 South African men were given life sentences

தென் ஆப்பிரிக்காவின் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், தனக்கு மனித மாமிசங்களை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிப்பதாகக் கூறியுள்ளார். முதலில் அவரை நம்ப மறுத்த போலீசார், பின்னர் அவர்  மாட்டி வந்த பையை சோதனை செய்துள்ளனர். அதில் சற்று முன் வெட்டப்பட்டது போல் இருக்கும் மனித கை, கால்களை  தனது பையில் அவர் வைத்திருந்திருக்கிறார்.


அதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அந்த நபரையும், அவருடன் மேலும் வந்த இன்னொரு நபரையும் கைது செய்துள்ளனர்.  அதில் ஒருவர் நெனோ என்னும் பெயர் கொண்டவர். தொடுசிகிச்சை வல்லுநரான அவருடன் வந்த இன்னொருவரின் பெயர் லுங்குசனி.  30 வயது மதிக்கத்தக்க இவர்களது முழுநேர வேலையே மனித மாமிசங்களை உண்பதாக இருந்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனித மாமிதம் என்று சொல்லக்கூடிய கேனிபிளிசம் என்பதற்கான தடை உள்ளதால், இருவரின் இரக்கமற்ற செயலின் பின்புலத்தை போலீசார் விசாரித்ததில், பலரையும் இவர்கள் கொன்று தின்றுள்ளனர்.


பின்னர் ஒரு வருடத்துக்கு முன்பாக இரு இளம் பெண்ணையும், கடைசியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது ஒரு இளைஞனையும் இவர்கள் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கோபமுற்ற நீதிமன்றம், கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags : #CANNIBALISM #SOUTHAFRICAN #VIRAL #HUMANFLESH #BIZARRE