13 வயது சிறுமி.. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் செய்த கொடுமை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 13, 2018 11:41 AM
tamilnadu - Auto Driver Kidnaps and Rapes 13 year old minor girl

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆட்டோ டிரைவர்கள் உட்பட மூன்று பேர், 13 வயது பள்ளிச் சிறுமியிடம், காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இரண்டு ஆண்டுகளாக வழக்கமான ஆட்டோவில் பள்ளிக்குச் செல்லும் சிறுமியை அவரது பெற்றோர் வழக்கம்போல ஆட்டோ டிரைவர் அக்பான் என்பவரது ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் தனது நண்பர்களான இர்பான்கான், முதாசீர் ஆகியோரின் துணையுடனும் துணிவுடனும் சிறுமியைக் கடத்தி, காதலிப்பதாகவும் கூறி வலுக்கட்டாயமாக பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இதனிடையே ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரித்ததில் ஆட்டோ டிரைவர்களையும் அவரது நண்பர்களையும் கூண்டோடு பிடித்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சிறுமியை பெற்றோரிடம் மீட்டுக்கொடுத்த போலீஸார், இந்த விவகாரத்தில் தலைமறைவான தப்ரோஸ், ஷெபாஸ் உள்ளிட்ட மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #13YEAROLDGIRL #MINOR #VELLUR