சிறுமியை ஆடையின்றி கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. 5 பேர் கைது!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 24, 2018 05:30 PM
14 years teen girl abused, 5 members arrested in Tanjore

எத்தனை யுகங்கள் ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் முடிவுக்கு வருமா? என்பது கேள்விக்குறிதான்.உலகம் முழுவதும் பெண்களை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

 

ஒருபுறம் #METOO ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள், கசப்பான சம்பவங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றனர். அதே நேரம்கலப்புத் திருமணம் செய்த பெண்கள், காதல் திருமணம் செய்த பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து-உதைப்பது, கொலை செய்வது போன்ற கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சை திருவையாறு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை மரத்தில் ஆடையின்றி கட்டிவைத்து, 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தந்தைக்கு துணையாக ஆற்றில் சென்று மணல் அள்ள உதவி செய்யும் அந்த சிறுமிக்கு  மகேந்திரன், சிவக்குமார், கண்ணன் ஆகிய மூவரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மறுபுறம் அதே பகுதியை சேர்ந்த குரு என்ற (16) சிறுமியிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

இது தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த வித்யா(27) என்ற பெண் சிறுமியை தரக்குறைவாக பேசியுள்ளார்.உச்சகட்டமாக  கடந்த 15-ம் தேதி கண்ணனின் செல்போனை திருடி விட்டதாக சிறுமியை மரத்தில் கட்டிவைத்து மகேந்திரன், சிவக்குமார்,கண்ணன், வித்யா நால்வரும் தாக்கியுள்ளனர்.மேலும் சிறுமியின்கதறிய சிறுமியின் கைகளில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

 

ஆடைகள் இன்றி அழுதுகொண்டே இருந்த சிறுமி ஒருகட்டத்தில் மயக்கம் போட்டுவிட, அவர்கள் நால்வரும் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆடைகளை எடுத்து அரைகுறையாக அணிந்து கொண்டு சிறுமி அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் ஓட, இதைக்கண்ட அந்த சிறுமியின் தந்தை கருப்பையாவின் நண்பர் ஒருவர் கருப்பையாவுக்கு தகவல் கொடுத்து சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

தற்போது கண்ணன், மகேந்திரன், சிவக்குமார், வித்யா, குரு  ஆகிய ஐவரையும் போக்சே சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம் ஐவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதில் குரு சிறுவர் சிறார் சிறையிலும் மற்ற நால்வரும் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : #SEXUALABUSE #TANJORE ##METOO