தவறு செய்திருந்தால்...என்னைத் தூக்கில் தொங்க விடுங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 17, 2018 10:48 PM
Director Susi Ganesan hits back at Leena Manimekalai

தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் தொங்க விடுங்கள் என, பிரபல இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்திருக்கிறார்.

 

கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றம் சாட்டியிருக்கிறார்.இதுதொடர்பாக சுசி கணேசன்  நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில்,''இந்த பிரச்சினைகளால் என்னுடைய வீட்டில் தொடர்ந்து அமைதி நிலவி வருகிறது. என் மனைவி உடைந்து போய் இருக்கிறார். எனது மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு பெண் சொல்லிவிட்டால் இந்த சமுதாயம் அதனை உண்மையென நினைக்கிறது.இதனை லீனா போன்ற பெண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

நான் தப்பு செய்யவில்லை என்று எனது பிள்ளைகளுக்குத் தெரிந்தால் போதும்.வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயம் உண்மையாக இருந்து நீதிமன்றம் என்னைக் கண்டித்தது என்றால் இந்த இடத்திலேயே என்னைத் தூக்கில் தொங்க விடுங்கள். அந்த பெண் மீது(லீனா) தவறு இருந்தால் குறைந்தது 10 நாட்களாவது ஜெயிலுக்கு அனுப்புங்கள்.அப்போது தான் இதுபோன்ற பெண்களுக்கு  புத்தி வரும்.

 

நீங்கள் பேசுகிற பெண்ணியம் உள்ளிட்ட எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் வந்து நிரூபியுங்கள். நான் நல்லவனா, கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்,'' என்றார்.

Tags : #SUSIGANESAN ##METOO #LEENAMANIMEKALAI