Aan Devadhai India All Banner

'அசைக்க முடியாத ஆதாரங்கள் வைத்திருக்கிறேன்'.. வீடியோ வெளியிட்ட வைரமுத்து!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 14, 2018 06:34 PM
Lyricist Vairamuthu releases video on harassment allegations

கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும்  தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.

 

அந்த வகையில் கடந்த ஒரு வாரகாலமாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர பாடகி சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.

 

சின்மயியின் குற்றச்சாட்டுக்கு முன்னதாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருந்தார்.

 

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதிலளித்து உள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியது இதுதான்:-

 

வணக்கம்.என்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம்  முழுக்க,முழுக்க பொய்யானது. முற்றிலும் உள்நோக்கம் உடையவை.அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம்.சந்திக்க காத்திருக்கிறேன்.மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருவாரகாலமாக ஆழ்ந்து,ஆலோசித்து வந்தேன்.

 

அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.நீங்கள் வழக்குப் போடலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன். நன்றி,'' என தெரிவித்துள்ளார்.

 

பதிலுக்கு சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்,'' மிஸ்டர் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #VAIRAMUTHU #CHINMAYI ##METOO