‘சித்தப்பாவுடன் வந்த 4 பேர்.. அம்மாவின் நாடகம்.. அப்பா தற்கொலை’.. 5 வயது மகன் கூறும் திடுக் உண்மைகள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 11, 2018 12:38 PM
Wife Kills Husband with the help of brother-in-law, revealed by sons

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகூடப்பட்டியைச் சேர்ந்த, கூலி வேலை பார்ப்பவர் ராஜலிங்கம்(35). இவரது மனைவி சோனியா (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முந்தைய நாள் சோனியா வீட்டில் இருந்து வீதிக்கு ஓடிவந்து தனது கணவர் ராஜலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி அனைவரையும் அதிரவைத்தார்.

 

ஆனால் ராஜலிங்கத்தின் இறப்பில் சந்தேகப்பட்ட போலீஸார், ராஜலிங்கம்-சோனியா தம்பதியரின் இரு மகன்களையும் விசாரித்ததில், மூத்த மகன் சில திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார். அதன்படி,  ‘எங்கள் சித்தப்பா சிவகுமார் இரவு வீட்டுக்கு வந்தார். அவருடன் வந்த 4 பேர், எங்கள் தந்தையாரை தாக்கி, ஊசி போட்டு தூக்கில் மாட்டிவிட்டுச் சென்றனர். அப்போது அம்மாவும் அதற்கு ஒத்துழைத்து நின்றுகொண்டிருந்தார்’ என்று கூறினார். 

 

சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்ட போலீஸார் உடனடியாக சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சோனியா, மற்றும் சிவகுமாரை விசாரித்ததில், ராஜலிங்கத்தின் தம்பியான சிவகுமாருடன், சோனியாவுக்கு ரகசிய உறவு இருந்ததாலும், அதனை அறிந்த ராஜலிங்கம் கண்டித்ததாலும் அவரை சோனியாவும் ராஜலிங்கமும் சேர்ந்து விஷ ஊசி போட்டு அவரைக் கொன்றுவிட்டு, ஆனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் வடிவமைத்து நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டனர்.

 

இதனையடுத்து, சிவகுமார், சோனியா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக உடன் வந்த சிவகுமாரின் நண்பர்களான அஜித், பாலாஜி, காளிமுத்து உள்ளிட்ட நால்வர் என அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : #TAMILNADU #CRIME #MURDER #AFFAIR #SON #HUSBAND #WIFE #BROTHER-IN-LAW #KRISHNAGIRI