நெஞ்சை உருக்க செய்யும், 19 வயது இளைஞரின் தற்கொலைக்கான காரணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 21, 2018 05:42 PM
youth commits suicide after losing his new mobile

மிகவும் இளகிய மனம் கொண்ட பல இளைஞர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமும் பயமும் முக்கிய காரணங்களாகின்றன. குஜராத்தில் செல்போனை தொலைத்ததற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞனின் குடும்பத்தார் இந்த விஷயத்தை நன்றாகவே உணர்ந்திருக்கக் கூடும். 

 

இளம் பிராயத்தில் இருந்தே சிறுவர்களை பயம் காட்டி வளர்க்காமல், தவறு செய்தாலும் அதை மன்னித்து, திருத்திக்கொள்வதற்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக பெற்றோர்கள் அளித்திருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. அதனாலேயே குஜராத்தின் பண்டசேராவில் உள்ள கர்மயோகி பகுதியைச் சேர்ந்த 19 வயது புரோமோத் ரத்தோடு, தான் டிரைவிங் வேலைக்குச் சென்று சம்பாதித்து வாங்கிய புதிய செல்போனை தொலைத்துவிட்டதால் அதை பெற்றோர்களிடம் சொல்வதற்கு தயங்கி மறைத்திருக்கிறான். 

 

அதோடு நிற்கவில்லை, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புமிக்க அந்த செல்போனை ஏன் தொலைத்தாய் என பெற்றோர்கள் கேட்டுவிடுவார்களோ என்கிற பயத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வித கடிதமும் கண்டுபிடிக்கப்படாததால் வேறு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, புதிய செல்போனை தொலைத்ததால், புரோமோத் மனம் வெதும்பி இருந்ததை பார்த்ததாகவும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : #SUICIDEATTEMPT #SMARTPHONE #LOST #DEAD #DEPRESSION