இந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழக அரசு வெளியிட்ட ஆணை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 27, 2018 04:37 PM
TamilNadu Government\'s new order regarding jallikattu festival

வருடாவருடம் தை மாதம் பொங்கல் அன்று, தமிழர் திருநாளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் பாரம்பரிய விளையாட்டும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பிரபலம்.


ஆனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் ஜல்லிக்கட்டு போராட்டமே எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சமயத்தில் தமிழக அரசால் அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு வருடம் தவறாமல் சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முறையான சட்ட திருத்தங்களுடன் 2019 ஜனவரி 15-ஆம் தேதி வரவிருக்கும் பொங்கல் பண்டிகையில் தொடங்கி கொண்டாடப்படும் எனவும் அறிவிப்பட்டது. 


இந்நிலையில், வரும் பொங்கலை முன்னிட்டு  தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவற்கான  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி அவனியாபுரத்தில் 15- ஆம் தேதியும், பாலமேட்டில் 16-ஆம் தேதியும், 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #TAMILNADU #JALLIKKATTU #FESTIVAL #PONGAL #CULTURE #TRADIONAL