200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 27, 2018 03:24 PM
TN - pregnant women is dead after assaulted by husband for 200 rupees

கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியை வெறும் 200 ரூபாய் காணவில்லை என்று கணவர் தாக்கியதால், அந்த பெண் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

அம்மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அருகே உள்ளது என்ஜிஓ காலனி. இங்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளாக தம்பதியர்களாக வசித்து வந்தவர்கள்தான் மணிகண்டனும் சுபிதாவும்.  இந்த தம்பதியர்க்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்க, சுபிதா மூன்றாவது முறை கர்ப்பமாகியிருந்த சமயத்தில் அவரது கணவர் மணிகண்டன், சுபிதாவுடன் அவ்வப்போது சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்களிடையே பேசப்படுகிறது.

 

அதன் பின்னர் ஒருநாள், வீட்டில் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என கணவரால் தாக்கப்பட்ட சுபிதா, தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதோடு மருத்துவமனை செல்வதையும் தவிர்த்திருந்திருக்கிறார்.  ஆனால் ஒரு கட்டத்தில் வலி  தாள முடியாமல், அருகில் இருந்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  

 

சுபிதாவின் இறப்புக்கு, அவரது கணவரின் 200 ரூபாய்க்கான தாக்குதல்தான் உண்மையான காரணமா அல்லது உடல் ரீதியான பின்னடைவா என்கிற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்த மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #PREGNANT WOMEN #TAMILNADU #HUSBAND #WIFE #SAD