‘அந்த ஹேர் கட்’தான் எல்லாத்துக்கும் காரணம்.. தலைமுடியால் தலைநிமிர்ந்த பெண்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 27, 2018 03:53 PM
16-year-old girl sets Guinness world record for having longest hair

உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவருக்கான  கின்னஸ் விருதினை இத்தாலிக்கு சென்று வாங்கியிருக்கிறார் குஜராத்திலுள்ள மோடாசா என்ற பகுதியைச் சேர்ந்த நிலான்ஷி  (16 வயது) என்கிற பத்தாம் வகுப்பு பயிலும் இளம் பெண்.  பள்ளியில் நண்பர்கள் எல்லாம் டேங்கில்டு அனிமேஷன் படத்தில் வரும் ரபுன்செல் என்று கலாய்ப்பார்களாம். அதை புகழாரமாகவும் சில நேரங்களில் செய்வார்களாம்.


இவரது தலைமுடியின் நீளம் 170.5 செ.மீ. இவர் 152.5 செ.மீ.  இதன்மூலம் முன்னதாக நீளமான தலைமுடி வைத்திருந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த அப்ரில் லோரின்சாட்டி  என்கிற பெண்ணின் சாதனையை நிலான்ஷி முறியடித்திருக்கிறார். தன்னுடைய 6-வது வயதில் தானும் தன் அம்மாவும் பார்லருக்கு சென்றபோது  தனக்கு ஹேர் கட் செய்யப்பட்டதாகவும், அதன் பின் கண்ணாடியை பார்த்தபோது அந்த ஹேர் கட் பிடிக்காததால், அன்று முதல் ஹேர் கட் செய்யும் பழக்கத்தை ‘கட்’ செய்திருக்கிறார் நிலான்ஷி.


முன்னதாக கோவாவுக்கு குடும்ப சுற்றுலா சென்றபோது வெளிநாட்டவர்கள் தன்னுடைய நீளமான தலைமுடியை பார்த்து வியந்து புகைப்படம் எடுத்த பின்பு,  தனது அப்பா- அம்மா  கின்னஸ் சாதனைக்கான லிம்கா புத்தக ரெக்கார்டுக்கு தன் நீளமான தலைமுடி தெரியுமாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

 

அதன் பிறகு சர்ப்ரைஸாக கிடைத்த இந்த கின்னஸ் விருதுக்காக இத்தாலி சென்றபோதுதான்  முதன்முதலில் விமானத்தில் சென்றதாகவும்,  அதுவும் தன் தலைமுடிக்காக என்பது குதூகலமாக இருந்ததாகவும் கூறும் நிலான்ஷி, தன் தலைமுடியை பராமரிப்பதற்காக தான் கடைபிடிப்பதெல்லாம், வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்குளிப்பது மட்டும்தானாம்!

Tags : #GUJARAT #SCHOOLGIRL #GUINNESS WORLD RECORD #LONGESTHAIR #VIRAL