‘கோலி சதம் அடிக்கலன்னா நா சொல்ற மாதிரி செய்யனும்..டீலா?’.. சவால் விடும் கிரிக்கெட் பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 26, 2018 08:59 PM
This Famous Cricketer does challenge by asking kohli to score century

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது.  முதலில் டாஸ் செய்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஹனும விகாரியும் மயங் அகர்வாலும் களமிறங்கினர்.

 

ஆட்ட முடிவில் புஜாரா அரை சதம் அடிக்க, இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 47 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த நிலையில், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி 100 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றால், அவர் ஓய்வு பெற தயாரா என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் சவால் விடுத்துள்ளார்.

 

முன்னதாக, மெல்போர்ன் மைதானம் தார் சாலைபோல் இருக்கும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் மிட்செல் ஜான்சன். அதற்கு பதில் அளித்த ரசிகர் ஒருவர், ‘கோலி 100 அடித்து விடுவார் என்பதற்காக, இப்பவே இப்படி சொல்றார் ஜான்சன்’ என்று கூறியிருந்தார்.

 

அதன் பிறகும் விடாத ஜான்சன், மேற்கண்ட சவாலை விட்டுள்ளார். அதற்கும் சும்மா விடாத ரசிகர் ஒருவர், ‘அவ்வாறு கோலி 100 அடித்தால் நீங்க நாட்டை விட்டு வெளியேறுவீர்களா’ என்று கேட்டு மோதியுள்ளார். இந்த ட்வீட்டுகள் வைரலாகி வருகின்றனர்.

 

Tags : #MITCHELL JOHNSON #AUSVIND #TEAMINDIA #VIRATKOHLI #CRICKET #TWEET #VIRAL