'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. டி20, ஒருநாள் போட்டிகளில் ‘தல’ தோனி: BCCI அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 24, 2018 07:23 PM
BCCI announces Indian Team for ODI, T20 Series list including dhoni

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, தனது 3-வது  டெஸ்ட் போட்டியினை மெர்ல்போன் மைதானத்தில் டிசம்பர் கடைசி வாரமும், 4வது டெஸ்ட் போட்டியை ஜனவரி முதல் வாரமும் விளையாடவுள்ளது. அதன் பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.

 

இந்த நிலையில் ஆஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவற்றுள்  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரும், கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’யுமான மகேந்திரசிங் தோனி இடம் பெற்றுள்ளார்.

 

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இந்த ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து தொடர்களில் ஆடுபவர்களை வைத்தே தயார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில், மேற்கண்ட இரு நாடுகளுடன் மோதவிருக்கும் இரண்டு இந்திய அணிகளுக்கும்  (ஒருநாள் மற்றும் டி20) விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும், தோனி பேட்ஸ்மேனாகவும்-விக்கெட் கீப்பராகவும்  இருப்பார்கள் என்றும் பிசிசிஐ அறிவிப்பின் மூலம் அறியப்படுகிறது.

 

 

ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:

 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி

 

 

டி-20 அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:

 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.

Tags : #MSDHONI #AUSVIND #TEST #ODI #T20 #BCCI #TEAMINDIA #VIRATKOHLI