'மஞ்சள் ஜெர்சி போட அடுத்த ஆளு ரெடி'...சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வந்த இளம் வீரர்...முழு வீரர்கள் பட்டியல் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 18, 2018 10:36 PM
CSK complete their squad, buy Mohit Sharma and Ruturaj Gaekward

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. 346 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களை எந்த அணி ஏலம் எடுக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

 

2018 சாம்பியனான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருந்தனர். ஏற்கனவே மொத்தம் 23 வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில்  இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட இருந்தனர்.

 

முதலில் 'மோகித் சர்மா'வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து.இதனையடுத்து 'ருட்டுராஜ் கைக்வாட்' என்னும் இளம் பேட்ஸ்மேனை சென்னை அணி ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.21 வயதான ருட்டுராஜ் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #CRICKET #BCCI #RUTURAJ GAEKWARD #CSK