'வந்தா ராஜாவா தான் வருவேன்'...மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 18, 2018 05:41 PM
Mohit Sharma back to Chennai Super Kings for IPL2019

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுகிறது.அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

 

ஐபிஎல் ஏலத்தில்  மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 2018 சாம்பியனான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் 2 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மொத்தம் 23 வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.

 

இந்நிலையில் 'மோகித் சர்மா'வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.இந்த தகவலை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #MOHIT SHARMA #CSK