'எங்க தலைவன எடுக்க மறந்துடாதிங்க யா'...ரசிகரின் ட்விட்டிற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்...'ஆமா யாரு அந்த தலைவர்' ?

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 18, 2018 04:29 PM
Unsold spree? Bring him on,CSK tweet goes viral

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுகிறது.அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

 

ஐபிஎல் ஏலத்தில்  மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 2018 சாம்பியனான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் 2 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மொத்தம் 23 வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.

 

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது வீரர்கள் குறித்த விபரங்கள் திரையில் ஒளிபரப்பாகும்.அவ்வாறு வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்,அந்த திரையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படத்தை,வைத்து அவரை ஒரு கிரிக்கெட் வீரராக சித்தரித்து,தலைவன எடுக்க மறந்துடாதிங்க யா என மீம்ஸ் போட்டுள்ளார்.அதோடு ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதை டேக் செய்துள்ளார்.அந்த மீம்ஸை ஷேர் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்,'அவரை கொண்டு வாருங்கள்' என பதிவிட்டுள்ளது.தற்போது அந்த ட்விட்டானது வைரலாகி வருகிறது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #CRICKET #PRIDEOF19 #SUPERAUCTION WHISTLEPODU