ஐசிசி தரவரிசை: கோலி’யின் முதல் இடத்துக்கு ‘செக்’ வைக்கும் கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 14, 2018 09:54 AM
ICC Ranking - This Cricketer is getting closer to kohli\'s first Place

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்தை சேதப்படுத்திய விஷயத்தால் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. 

 

இந்நிலையில் கோலியின் இடத்தை  நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் நெருங்கி தொட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 913 புள்ளிகளுடன் வில்லியம்ஸன் இரண்டாம் பிடித்து, இத்தனை புள்ளிகளை தொடும் முதல் நியூசிலாந்து கிரிக்கெட் பிரபலம் என்கிற புகழை பெறுகிறார். 

 

விராட் கோலியோ 920 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும், தொடர் கிரிக்கெட் விளையாட்டின் முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குத் துணையாக இருந்தாலும், சிறப்பான பேட்டிங் மற்றும் அதிக ரன்களை குவிக்க முடியாததால், இந்த புள்ளிகளே நீடிக்கின்றன.

 

ஆக, கோலியைத் தொடுவதற்கு, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸனுக்கு இருப்பது 7 புள்ளிகளே என்றிருக்க, இலங்கைக்கு  எதிராக நியூசிலாந்து விளையாடவுள்ள 2 தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வில்லியம்ஸனின் ரன் ரேட் அதிகமானால் கோலியின் முதல் இடத்தை வில்லியம்ஸன் பிடித்துவிட வாய்ப்புள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், கோலியின் ரசிகர்களும் 

Tags : #VIRATKOHLI #CRICKET #AUSTRALIA #ICCRANKINGLIST