102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 13, 2018 12:41 PM
A 102 yr old great-grandmother becomes the world\'s oldest skydiver

102 வயதான மூதாட்டி வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாகசக்கார பாட்டியாக மாறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐரியன் ஓ ஷியா என்கிற இந்த பாட்டியம்மா செய்த இந்த சாகசம், சாதாரணமாக தரையில் நிகழவில்லை. ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து மூதாட்டி இந்த சாதனையை செய்துள்ளார்.

 

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு, அதாவது பாட்டியம்மாவின் 100வது வயதில் தன் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக, 220 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து குதித்து சாதனை செய்தபோது, வெகு சாதாரணமாக, அதைச் செய்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

 

இந்த நிலையில் தற்போது, 102 வயதில் பாட்டிம்மா செய்துள்ள சாகசம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.  ஆனால் இந்த முறை வானத்தை வெகு அருகில் பார்த்த மூதாட்டி, ‘வானம் மிகவும் தெளிவாகவும் அதே சமயம் குளிராகவும் இருந்ததாகக் கூறி நெகிழந்துள்ளார்.’

 

முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த தனது மகளால் துயரம் கொண்ட மூதாட்டி, மகளைப் போலவே புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ரிஸ்க்கினை இந்த வயதிலும் எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags : #SYDNEY #SKYDIVING #AUSTRALIA #OLDEST #WORLDRECORD #VIRALVIDEO #GREATGRANDMOTHER