'எல்லாம் உங்களுக்குத் தான்'.. சும்மா புகுந்து வெளையாடுங்க கண்ணுங்களா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 13, 2018 12:10 PM
#AusVsInd: India name 13-man squad for 2nd Test

ஆஸ்திரேலியாவில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடக் கூடிய இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சற்றுமுன் வெளியிட்டது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அஸ்வின் காயம் காரணமாகவும், பார்ம் இல்லாத காரணத்தால் ரோஹித் சர்மாவும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

 

இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாமி, பும்ரா, புவி,இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர்களின் புகைப்படங்களை வெளியிட்டு,''உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன,'' என வாழ்த்தியுள்ளது.