அடுத்த முறை 37 ரன்ல அவுட் ஆனா, கழுத்தை புடிச்சு தூக்கிடுவேன்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 13, 2018 11:03 AM
I will catch hold of your neck like this again says, Yuvraj Singh

அடுத்த முறை 37 ரன்ல அவுட் ஆனா, உண்மையிலேயே கழுத்தை புடிச்சு தூக்கிடுவேன் என ரோஹித் சர்மாவை, யுவி செல்லமாக மிரட்டியுள்ளார்.

 

நேற்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவும், யுவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பதிலுக்கு யுவி, ''அடுத்த முறை நீ இப்படி 37 ரன்களில்  அவுட் ஆனால், உண்மையிலேயே புகைப்படத்தில் உள்ளது போல உனது கழுத்தைப் பிடித்து தூக்கிவிடுவேன்,'' என செல்லமாக மிரட்டியுள்ளார்.

 

யுவியின் இந்த மிரட்டலுக்கு ரசிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.( ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 37 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது).

Tags : #CRICKET #ROHITSHARMA