'மோசமான பந்தில் சிக்ஸ் அடி'.. ஒரு ஓவர் முழுவதும் 'கமெண்ட்ரி' நிறுத்தம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 10, 2018 02:22 PM
#AusVsInd: Rishabh Pant Sledging Pat Cummins, Watch Video!

மோசமான பந்தில் சிக்ஸ் அடி என பேட் கம்மின்ஸை, இளம் வீரர் ரிஷப் பண்ட் வம்புக்கிழுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 11 கேட்சுகள் பிடித்து, ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைச் சமன் செய்தார்.

 

மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இந்த முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுத்தார். இவர் தொடர்ச்சியாகப் வம்பிழுப்பதைக் கவனித்த வர்ணனையாளர்கள், அஷ்வின் பந்துவீசும்போது, தங்களின் வர்ணனையை நிறுத்திவிட்டு, பண்ட் பேசுவதை மட்டும் ஒளிபரப்பினர். அதில் பண்ட், ''இங்கு அனைவரும் புஜாரா இல்லை. இங்குத் தாக்குப்பிடிப்பது எளிதல்ல. பேட் (கம்மின்ஸ்), மோசமான பந்தை சிக்ஸ் அடி பார்க்கலாம்,'' என தொடர்ச்சியாக அவரை வம்பிழுத்தார்.

 

ரிஷப் பண்டின் இந்த ஸ்லெட்ஜிங் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருகிறது.

Tags : #CRICKET #VIRATKOHLI ##AUSVSIND