'ஷூ கழண்டு விழுந்தா சொல்லலாம்ல'.. இப்படியா அவுட் ஆகுறது?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 06, 2018 06:44 PM
Yasir Shah run out after his shoe comes off in Test vs New Zealand

ரன் எடுக்க ஓடும்போது ஷூ கழண்டு விழுந்ததால், தனது விக்கெட்டை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா பறிகொடுத்துள்ளார்.

 

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் கானுடன், பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8-வது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடினார்.

 

இதில் 133வது ஓவரின் முதல் பந்தை சர்ப்ராஸ் சந்தித்தார். பந்தை தட்டிய சர்ப்ராஸ் இரண்டு ரன்கள் ஓடலாம் என யாசிருக்கு கூறினார். முதல் ரன்னை எளிதாக ஓடினர்.  ஆனால் யாசிர் ஷா 2-வது ரன் ஓடிய போது ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் ஓடி முடித்து விட்ட நிலையில், யாசிரால் ஓட முடியவில்லை. ஏன் என்று பார்த்தால் யாசிர் ஷாவின் ஷூ அவிழ்ந்து விழுந்தது தான் அதற்கு காரணம் காரணம்.

 

இதனைப் பார்த்த சர்ப்ராஸ் ஷூ அவிழ்ந்தது என்றால் சொல்லி இருக்கலாமே என, புலம்பித் தள்ளி இருக்கிறார்.