'மரண அடி'னா இதுதானா?.. அசால்ட்டாக '200' ரன்களைக் குவித்த இளம் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 04, 2018 10:23 AM
Australia\'s Teen Six Sixes In An Over video goes viral

19 வயதுக்குட்பட்டோருக்கன ஒரு நாள் போட்டியில்,ஆலிவர் டேவிஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள்  அடித்ததோடு, வெறும் 115 பந்தில் 207 ரன்களை குவித்து சாதனை புரிந்துள்ளார்.

 

தற்போது ஆஸ்திரேலியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கன,சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது .இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது,நியூ சிட்னி மெட்ரோ  அணியின் சார்பாக களமிறங்கிய ஆலிவர் டேவிஸ் என்ற வீரர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம்18 சிக்ஸர்கள் விளாசியதோடு 207 ரன்களையும் குவித்தார்.

 

முதல் 100 ரன்களை அடிக்க 74 பந்துகளையும்,அடுத்த 100 ரன்களை அடிக்க வெறும் 39 பந்துகள் மட்டுமே எடுத்து கொண்ட ஆலிவர்,18 சிக்ஸர்கள்  அடித்ததோடு, ஒரே ஒவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற  சாதனையையும் படைத்துள்ளார்.

 

ஆலிவர் டேவியாஸின் அதிரடி ஆட்டத்தால் நியூ சிட்னி மெட்ரோ அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்களை குவித்தது.

Tags : #CRICKET #AUSTRALIA #SIXES IN AN OVER #OLIVER DAVIES