'ரோஹித் சர்மா' அணியில் இல்லாவிட்டால் ஆஸியை ஆதரிப்பேன்?.. ஹர்பஜன் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 03, 2018 10:33 AM
Harbhajan Singh to support Australia if Rohit isn’t selected?

ரோஹித் சர்மா அணியில் இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என, தனது பெயரில் போலி ட்வீட் பதிவிடப்பட்டதால் ஹர்பஜன் சிங் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன்,''நான் கூறியதாக வரும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் போலியானவை. யார் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள் என எனக்குத் தெரியாது. நான் கூறியதுபோல் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை எப்படிப் பதிவிடுகிறார்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இந்தியாவைச் சேர்ந்து ஆதரிப்போம்,'' என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பின், அணியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #VIRATKOHLI ##AUSVSIND