'இவரு பந்துல ஆடுறது ரொம்ப கஷ்டம் '.. யார்க்கரால் ஸ்டெம்புகளை சிதறவிட்ட பவுலர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 03, 2018 10:32 AM
Jasprit Bumrah\'s Ferocious Yorker video goes viral

தனது துல்லியமான யார்க்கரினால்,ஆஸ்திரேலிய வீரரின் விக்கெட்டை வீழ்த்தி அவரை வெளியேற்றினார் ஜஸ்பிரித் பும்ரா.

 

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வழக்கம் போலவே பின் வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.234 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, எஞ்சிய 4 விக்கெட்டுக்கு 310 ரன்களை வாரி வழங்கினார்கள். ஷமி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், உமேஷ் மற்றும் இஷாந்த் ஆகியோரால் ஆஸ்திரேலிய வீரர்களை அசைத்து கூட பார்க்க முடியவில்லை. இருவரும் ஆளுக்கு 20 ஓவருக்கு மேல் வீசி தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டையினை வீழ்த்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வந்தார்கள்.இதனால் இறுதியில் பும்ரா களமிறக்கப்பட்டார்.1.1 ஓவர் மட்டுமே வீசிய பும்ரா,ஜாக்சன் கோல்மேனை,தனது அபாரமான யார்க்கரால் கிளீன் போல்டாக்கி அனுப்பினார்.பும்ராவின் யார்க்கர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

பயிற்சி ஆட்டத்தின் போது கெத்து கட்டிய பும்ரா,வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் தனது முழு திறனையும் வெளிப்படுத்துவார்,என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : #CRICKET #BCCI #JASPRIT BUMRAH #JACKSON COLEMAN #INDIA VS AUSTRALIA