'ப்ரித்வி ஷாக்கு பதிலா இவர களமிறக்குங்க'...பிரபல வீரர் சொல்லும் அட்வைஸ்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 01, 2018 03:50 PM
Rohit To Replace Shaw For India vs Australia 1st Test says Vaughan

ப்ரித்வி ஷா காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக, துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவை களமிறக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யோசனை தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.இந்நிலையில் சிட்னியில் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது,மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ப்ரித்வி ஷா கேட்ச் பிடிக்க‌ முற்பட்ட போது முட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.

 

ப்ரித்வி ஷாவிற்கு தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்,துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவை களமிறக்கினால் நன்றாக இருக்கும் என யோசனை தெரிவித்துள்ளார்.

 

ஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் ஷர்மா,டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #BCCI #PRITHVI SHAW