'ஏன் இப்படி புதுசு புதுசா அவுட் ஆகுற'...பயிற்சியாளரை கடுப்பேற்றிய பிரபல வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 01, 2018 12:32 PM
KL Rahul is fininding new way to loose his wicket says Sanjay Bangar

புது புது வழிமுறைகளில் தனது விக்கெட்டினை கே.எல்.ராகுல் இழக்கிறார்' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கோபத்துடன் கூறியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த போட்டிகளானது வரும் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

 

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான  4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் தொடங்கியது.முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று காலை இந்திய நேரப்படி தொடங்கியது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

 

இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் வெறும் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.இது இந்திய பயிற்சியாளர் சஞ்சய் பங்கருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்ததோடு,கடும் கோபத்தையும் வரவழைத்தது.இது குறித்து கருத்து தெரிவித்த அவர் ‘ராகுல் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் புது புது  வழிமுறைகளை கண்டுபிடித்து ஆட்டமிழப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது.

 

இந்த ஆட்டத்தில் கூட விலகிச் சென்ற பந்தை தேடி போய் அடித்து, தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஃபார்முக்கு வர ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். அவரது திறமை எங்களுக்கு தெரியும்.அவர் நிச்சயம் சாதிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.

Tags : #CRICKET #KLRAHUL #AUSTRALIA #SANJAY BANGAR