யாருக்கும், எதையும் நிரூபிக்கணும்னு 'எங்களுக்கு' அவசியம் இல்ல

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 02, 2018 06:43 PM
Virat speaks about AusVSInd test series in

யாரிடமும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என விராட் கோலி தெரிவித்திருக்கிறார்.

 

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

 

இந்த நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய ரேடியோ ஒன்றுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்திருக்கிறார்.

 

அப்போது அவர் கூறுகையில், "இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு, அதைக் கைப்பற்றுவதே எங்கள் நோக்கம். மைதானத்தில் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுவோம். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் திறன் எங்களுக்கு இருக்கிறது என்றே நாங்கள் நம்புகிறோம். அதேபோல், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #VIRATKOHLI #CRICKET ##INDVSAUS